/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ. 15க்கு நாட்டு ரக பாக்கு செடி விவசாயிகளுக்கு அழைப்பு ரூ. 15க்கு நாட்டு ரக பாக்கு செடி விவசாயிகளுக்கு அழைப்பு
ரூ. 15க்கு நாட்டு ரக பாக்கு செடி விவசாயிகளுக்கு அழைப்பு
ரூ. 15க்கு நாட்டு ரக பாக்கு செடி விவசாயிகளுக்கு அழைப்பு
ரூ. 15க்கு நாட்டு ரக பாக்கு செடி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 09, 2024 04:10 AM
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், அருநுாற்றுமலை அடுத்த சிறுமலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் மதுமிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறுமலையில், 1987 முதல், அரசு தோட்டக்கலை பண்ணை செயல் படுகிறது. அதன் மொத்த பரப்பளவு, 22 ஏக்கர். இங்கு, விவசாயிகளுக்கு தேவையான தரமான செடிகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. தற்போது நாட்டுரக பாக்கு செடி, மா ஒட்டு செடி, மா மென்தண்டு ஒட்டு செடி, மல்லி செடி, பப்பாளி, ரெட் லேடி செடி, எலுமிச்சை, கருவேப்பிலை, மருத்துவ குணம் வாய்ந்த செடி உள்ளிட்ட அனைத்து வகையான செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இதில், நாட்டுரக பாக்குசெடி ஒன்றின் விலை, 15 ரூபாய்க்கு கிடைக்கும். விற்பனைக்காக, நாட்டுரக பாக்கு செடி, 70,000, மல்லி செடி, 8,000, எலுமிச்சை செடி, 5,000, மா பக்க ஒட்டு செடி, 3,000, மா மென்தண்டு ஒட்டு செடி, 5,000, நெல்லி ஒட்டு செடி, 2,000 எண்ணிக்கையில் தயாராக உள்ளன. எனவே, விவசாயிகள், பண்ணையில் நேரடியாக பார்வையிட்டு தேவையான செடிகளை குறைந்த விலையில் பெற்று கொள்ளலாம். மேலும் தகவல் பெற, 76397 - 80782, 96988 - 83076 என்ற எண்ணில் பேசலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.