ADDED : ஜூலை 18, 2024 02:02 AM
சேலம்: சேலத்தில் நேற்று சாரல் மழை மற்றும் மேக மூட்டத்துடன் வானிலை காணப்பட்டதால், குளுகுளு சூழல் நிலவியது.
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய சாரல் மழை, அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது. காலை, 8:00 மணி வரை ஆங்காங்கே சாரல் மழை பெய்ததால், குளிரான சீதோஷ்ணம் நிலவியது. தொடர்ந்து மாலை வரை, கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால், சூரியனின் வெப்ப தாக்குதல் இல்-லாமல், மலை
பிரதேசங்களை போல், குளுகுளு சூழல் நிலைவியது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், நேற்று காலை வரை பதிவான மழையளவு விபரம்: ஏற்காடு - 12.6 மி.மீ., டேனிஷ்பேட்டை - 11, கரியகோவில் - 7, மேட்டூர் - 4.6, ஆத்துார், 4.4, சேலம் -0.8 மி.மீ., என மொத்தம், 45.4 மி.மீ., பெய்தது.