Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ADDED : ஜூலை 18, 2024 02:02 AM


Google News
சேலம்: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக போற்றப்படுகிறது. ஆடி மாதப்பிறப்பு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இந்த மாதத்தில் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்வர். நேற்று ஆடி மாத பிறப்-பையொட்டி, சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றன.

கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தன. தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்தி-ருந்து அம்மனை வழிபட்டனர். பின் அவர்களுக்கு கூழ் வழங்கப்-பட்டது.

நெத்திமேடு, தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில், அம்ம-னுக்கு எலுமிச்சை மாலையால் அலங்காரமும், டவுன் கடை

வீதியில் உள்ள ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரமும் செய்யப்-பட்டு இருந்தது. அதேபோல் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள, வெண்ணங்குடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்-பட்டு இருந்தது.

மேலும் அய்யந்திருமாளிகையில் மாரியம்மன் கோவில் கோவில், எல்லைபிடாரியம்மன் கோவில், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அம்மாபேட்டை மாரியம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் அம்மனை தரி-சனம் செய்தனர்.

* ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி மாதப்பிறப்பையொட்டி, நேற்று மூலவர் அம்ம-னுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, சர்வஅலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. புதுமண தம்பதிகள் மஞ்சள் கயிற்றை கட்டி அம்மனை வழிபட்டனர். இதே போல் அரி-யானுார் மகாசக்தி மாரியம்மன், வீரபாண்டி அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அரியானுார், 1,008 சிவாலயம், உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில் ஆடி மாதப்பிறப்பையொட்டி, மூலவர் பெரிய நாயகி அம்ம-னுக்கு திருவிளக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us