ரூ.20 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ரூ.20 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ரூ.20 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ADDED : ஜூன் 11, 2024 05:48 AM
ஆத்துார் : ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 841 மூட்டை(269.21 குவிண்டால்) பருத்தியை கொண்டு வந்தனர். ஆத்துார், திருப்பூர், திருச்சி, சேலம், கோவை பகுதி வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயித்தனர்.
குவிண்டால் பி.டி., ரகம், 7,089 முதல், 8,099 ரூபாய்; டி.சி.ஹெச்., ரகம், 8,389 முதல், 10,089; கொட்டு பருத்தி(கழிவு) 3,589 முதல், 5,099 ரூபாய் வரை விலைபோனது. 841 மூட்டைகள் மூலம், 20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு பி.டி., ரகம், 100 ரூபாய், டி.சி.ெஹச்., ரகம், 80 ரூபாய் விலை குறைந்தது. கொட்டு பருத்தி, 110 ரூபாய் விலை உயர்ந்தது.