/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.1.20 லட்சத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு ரூ.1.20 லட்சத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு
ரூ.1.20 லட்சத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு
ரூ.1.20 லட்சத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு
ரூ.1.20 லட்சத்தை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 11, 2024 05:48 AM
சேலம் : வாழப்பாடியில் இருந்து தும்பல் செல்லும் அரசு பஸ்சில் கடந்த 9ல் டிரைவராக ராமானுஜம், கண்டக்டராக சுதாகர் பணியில் இருந்தனர்.
பயண முடிவில் சீட்டில் கேட்பாரற்ற நிலையில் பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, 1.20 லட்சம் ரூபாய், லேப்டாப் இருந்தன. உடனே கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு துக்கியாம்பாளையத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடித்து, அவரிடம் ஒப்படைத்தனர். இதனால் நிர்வாக இயக்குனர் பொன்முடி, இருவரையும் வரவழைத்து, அவர்களது நேர்மையை பாராட்டினார்.