/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் 5 பேர் பலி பஸ் டிரைவரின் 'லைசென்ஸ்' ரத்து விபத்தில் 5 பேர் பலி பஸ் டிரைவரின் 'லைசென்ஸ்' ரத்து
விபத்தில் 5 பேர் பலி பஸ் டிரைவரின் 'லைசென்ஸ்' ரத்து
விபத்தில் 5 பேர் பலி பஸ் டிரைவரின் 'லைசென்ஸ்' ரத்து
விபத்தில் 5 பேர் பலி பஸ் டிரைவரின் 'லைசென்ஸ்' ரத்து
ADDED : ஜூன் 14, 2024 02:47 AM
சேலம்:விபத்தில், 5 பேர் பலியான நிலையில் தனியார் பஸ் டிரைவரின், 'லைசென்ஸ்' ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டியில் நேற்று முன்தினம் டாரஸ் லாரியை தொடர்ந்து சென்ற இரு பைக்குகள் மீது 'சண்முகா' எனும் தனியார் பஸ் மோதியது. இதில், இரு குழந்தைகள் உள்பட, 5 பேர் உயிரிழந்தனர். வீராணம் போலீசார் வழக்குப்பதிந்து, சுக்கம்பட்டி, காந்தி நகரை சேர்ந்த, தனியார் பஸ் டிரைவர் ரமேஷ், 29, என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறையினர் கூறியதாவது:
சம்பவ இடத்தில் உள்ள வேகத்தடையால் லாரி மெதுவாக சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து இரு பைக்குகளை ஓட்டிவந்தவர்கள் நிறுத்தினர். இதையடுத்து தனியார் பஸ் வந்தது. அதன் டிரைவர், 'ஹாரன்' அடித்தபடி வந்து முந்த முயன்றார். எதிரே கல்லுாரி வாகனம் வந்தது. இதை, பக்கத்தில் வந்த பின் கவனித்த டிரைவர், உடனே பஸ்சை திருப்பிய வேகத்தில், நின்றிருந்த பைக்குகள் மீது பஸ் மோதியது. இதில், 5 பேர், பஸ் - லாரி இடையே சிக்கி நசுங்கி உயிரிழந்தனர். அப்பகுதியில், 'விபத்து பகுதி, மெதுவாக செல்லவும், வேகத்தடை உள்ளது' என அறிவிப்பு கூட செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து டிரைவரின் தவறால் ஏற்பட்டுள்ளது. அவரது ஓட்டுனர் உரிமத்தை, தற்காலிக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பின் நீதிமன்றம் மூலம் உரிமத்தை நிரந்தர ரத்து செய்ய முயற்சி எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.