/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பல்கலை துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது தொழிலாளர்கள் வலியுறுத்தல் பல்கலை துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பல்கலை துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பல்கலை துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பல்கலை துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 14, 2024 02:39 AM
ஓமலுார்:துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
சேலம் பெரியார் பல்கலையில், 2021 ஜூலையில் துணைவேந்தராக ஜெகநாதன் பதவி ஏற்றது முதல், சர்ச்சைக்குரிய செயல்களை முன்னெடுத்து வருகிறார். முன்னாள் பதிவாளர் தங்கவேலுடன் இணைந்து அரசு அனுமதியின்றி, இரு நிறுவனங்களை தொடங்கியதாக, கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிந்து ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின் நிபந்தனை ஜாமினில் வந்தார். பல்கலையில் நடந்த முறைகேடுகளை விசாரித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழுவினர், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி விசாரணை அறிக்கையை அரசுக்கு அளித்தனர்.
இம்மாத இறுதியில் பணி நிறைவு பெற உள்ள ஜெகநாதன், பணி நீட்டிப்பு பெற முயற்சிக்கிறார். போலீஸ் துறையின் குற்ற வழக்கு நிலுவை மற்றும் அரசின் உயர்மட்டக் குழு விசாரணை அறிக்கை நிலுவை ஆகியவற்றில் சிக்கியுள்ள ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜெகநாதன் பணியில் இருந்த 3 ஆண்டுகளில் நடந்த முறைகேடு எனக் கூறி, 500 பக்க ஆவணங்களையும் அனுப்பியுள்ளனர்.