/உள்ளூர் செய்திகள்/சேலம்/ '40 நாளில் அனைத்து மாணவருக்கும் சைக்கிள்' '40 நாளில் அனைத்து மாணவருக்கும் சைக்கிள்'
'40 நாளில் அனைத்து மாணவருக்கும் சைக்கிள்'
'40 நாளில் அனைத்து மாணவருக்கும் சைக்கிள்'
'40 நாளில் அனைத்து மாணவருக்கும் சைக்கிள்'
ADDED : ஜூலை 29, 2024 01:11 AM
சேலம்: ''இன்னும், 40 நாட்களுக்குள் அனைத்து மாணவ, மாணவிய-ருக்கும் இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது,'' என, அமைச்சர் நேரு பேசினார்.
சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2024 - 25க்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்-தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வரவேற்றார்.
அமைச்சர் நேரு பேசியதாவது: தமிழகத்தில் மருத்துவம், பொறி-யியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு நடக்கும் கலந்தாய்வில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பள்ளி கல்-வித்துறைக்கு, 48,000 கோடி ரூபாய் ஒதுக்கி, அதில் பள்ளி கட்ட-டங்கள் கட்ட, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும், 26,199 பேருக்கு, 12.63 கோடி ரூபாய் மதிப்பில் சைக்கிள் வழங்கப்படுகிறது.
கன்னங்குறிச்சி அரசு பள்ளியில், 128 மாணவ, மாணவியருக்கு, 6.19 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கி, மாவட்-டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும், 40 நாட்களுக்குள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை சார்பில் விலையில்லா சீருடை வழங்கும் திட்-டத்தில், 1,879 பள்ளிகளில் படிக்கும், 1.56 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு தையல் கூலி செலவினம், 4.17 கோடி உள்-பட, 19.75 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகையில், 2023 - 24ல் சத்தியவாணி முத்து அம்-மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்-டத்தில், 10.55 லட்சம் ரூபாய் மதிப்பில், 145 தையல் இயந்தி-ரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வ-கணபதி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள் உள்பட பலர் பங்-கேற்றனர்.