/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம்' 'தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம்'
'தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம்'
'தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம்'
'தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம்'
ADDED : ஜூலை 29, 2024 01:10 AM
சங்ககிரி: ''உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்கியம்,'' என, அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க, 50ம் ஆண்டு பொன்விழா, வீராச்சிப்பாளையத்தில் நேற்று நடந்தது. தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். செயலர் மோகன்குமார் வரவேற்றார். பொன்விழா மலரை வெளியிட்டு, நகராட்சி நிர்வா-கத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது:
தமிழக பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் லாரி தொழில் சிறந்து விளங்குகிறது. தற்போது தினமும், 5,000 முதல், 10,000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு லாரி டிரைவர் பற்றாக்குறை உள்ளது. ஆனாலும், உரிமையாளர்கள் தொழிலை சிறப்பாக நடத்துகின்றனர். இதன்மூலம் அவர்களும் வளர்ந்து, தமிழக வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''நாம் உயிர் வாழ, உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தமிழக பொருளாதாரத்துக்கு லாரி தொழில் முக்-கியம். முதல்வர் ஸ்டாலின் தமிழக பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறார். அதற்கு லாரி தொழில் உறுதுணை-யாக உள்ளது,'' என்றார்.
ஆல் இண்டியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்., தலைவர் சண்-முகப்பா பேசுகையில், ''காலாவதி சுங்கச்சாவடிகள், வாகன காப்-பீடு மூலம், 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியால், லாரி உரிமையாளர் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து எம்.பி., மத்திய அரசிடம் எடுத்துக்கூறி, உதவ வேண்டும்,'' என்றார்.
தமிழக லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் தனராஜ் பேசுகையில், ''சங்ககிரியில் ஆட்டோ நகர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
விழாவில் சேலம் எம்.பி., செல்வகணபதி, சேலம் வடக்கு எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க பொருளாளர் செங்கோட்டுவேல், உறுப்பினர்கள், பல்வேறு லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.