/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா அணைகளிலிருந்து 75,500 கன அடி நீர் திறப்பு ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு
UPDATED : ஜூலை 19, 2024 07:00 AM
ADDED : ஜூலை 19, 2024 02:42 AM

கர்நாடகா அணைகளிலிருந்து, 75,500 கனஅடி உபரி நீர் திறக்கப்-பட்டுள்ளது. அதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 35,000 கன அடியாக அதிகரித்துள்-ளதால், ஆற்றில் பாறைகளை மூடி, அருவிகளில் வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாட-காவின் குடகு, மடிக்கேரி, மைசூர், மாண்டியா, ஹாசன் உள்-ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாட-காவில் உள்ள அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி மற்றும் நுகு அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால், அணைகளுக்கு வரும் உபரி நீர், அணை பாதுகாப்பு கருதி அப்ப-டியே காவிரியில் திறக்கப்படுகிறது. நேற்று மாலை கபினியில், வினாடிக்கு, 70,000 கன அடி, நுகு அணையில், 5,000, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 500 கன அடி என மொத்தம், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு, 75,500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 10:00 மணிக்கு, 33,000 கன அடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 35,000 கன அடியாகவும் அதிகரித்துள்-ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளை மூடும் அளவிற்கு நீர்வரத்து அதிகரித்து, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால், 3வது நாளாக காவிரியாற்றில், குளிக்-கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்-ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைப்பாதை மூடப்பட்டு, போலீசார் மற்றும் வருவாய் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து பெய்யும் மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில், ஓரிரு நாட்-களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது.
ஒரே நாளில் 5 அடி உயர்வு
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. இதனால், கடந்த மே 16ல், 50.16 அடியாக இருந்த அணை நீர்-மட்டம், 17 ல், 49.95 அடியாக சரிந்தது. கடந்த, 3ல் நீர்மட்டம், 39.65 அடியாக சரிந்தது. அதன் பின்பு நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு, 21,520 அடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 23,989 கன-அடியாகவும், மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 31,102 கனஅ-டியாகவும் உயர்ந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம், 46.80 அடி-யாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று மாலை, 4:00 மணிக்கு, 51.38 அடியாகவும், 15.85 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 18.69 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது.
நேற்று ஒரே நாளில் அணை நீர்மட்டம், 5 அடியும், நீர் இருப்பு, 3 டி.எம்.சி.,யும் அதி-கரித்தது. வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.சேலம், மேட்டூர் வட்டத்தில் காவிரி கரையோரத்திலுள்ள பண்ண-வாடி, கோட்டையூர், செட்டிப்பட்டியில் இருந்து மறுகரையிலுள்ள தர்மபுரி மாவட்டம், நாகமறை, ஒட்டனுார், ஏமனுார் பகுதிக்கு பயணிகள் விசைப்படகு, பரிசல்கள் இயக்கப்படும். கர்-நாடகாவின் கபினியில் திறக்கப்பட்ட உபரி நீர் காவிரியில் பெருக்கெடுத்து வருவதால், மூன்று பகுதிகளிலும் காவிரியாற்றில் இயக்கப்பட்ட பயணிகள் விசைப்படகு, பரிசல்கள் இரு நாட்க-ளாக நிறுத்தப்பட்டது. நீர்வரத்து கூடுதலாக இருப்பதால், மீனவர்-களும் பரிசல்களில் மீன்பிடிக்க செல்லவில்லை.
பரிசல் போக்குவ-ரத்து நிறுத்தப்பட்டதால் சேலம், தர்மபுரி காவிரி கரையோரம் வசிக்கும் கிராம மக்கள், பஸ்சில் மேச்சேரி வழியாக சுற்றி மேட்டூர், கொளத்துார் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருவதால், அதற்கேற்ப நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணை நிரம்பி, 120 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீர், 16 கண் மதகு வழி-யாக வெளியேற்றப்படும். அதற்காக ஷட்டரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது
நமது நிருபர் குழு .