ADDED : ஜூலை 19, 2024 02:43 AM
கிருஷ்ணகிரி: தளி அருகே, விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி, யானை கூட்டம் தாக்கியதில் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பனசுமானதொட்டியை சேர்ந்தவர் பரமேஷ், 45, விவசாயி. இவர், சாமாந்தி பூ பயிரிட்-டுள்ள தன் தோட்டத்திற்கு நேற்று காலை, 6:00 மணிக்கு சென்-றுள்ளார். அப்போது ஜவளகிரி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த, 3 யானைகள் அவரை துரத்திச் சென்று, மிதித்து கொன்றன. காலை, 7:30 மணிக்கு அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவல் படி, ஜவளகிரி வனத்
துறையினர் மற்றும் தளி போலீசார், பரமேஷ் உடலை மீட்-டனர்.
அப்போது அவர்களிடம் அப்பகுதி மக்கள், இப்பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, சோலார் மின்வேலி அமைக்க கேட்டும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசாரும், வனத்துறையி-னரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினர். யானை தாக்கி உயிரிழந்த பரமேஷின் குடும்பத்திற்கு, முதல்கட்ட-மாக, 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகையை வனத்துறையினர் வழங்கினர்.