ADDED : ஜூன் 17, 2024 01:25 AM
சங்ககிரி: நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தனியார் நுால் மில்லில், நேற்று முன்தினம் இரவு பணி முடித்த, 38 தொழிலாளர்கள், மினி வேனில் வீடுகளுக்கு புறப்பட்டனர்.
அதில் சங்ககிரி, கொங்கணாபுரம், சின்னப்பம்பட்டி, தாரமங்கலம் பகுதி தொழிலாளர்கள் இருந்தனர். வேனை, இடைப்பாடி, இருப்பாளியை சேர்ந்த செல்வம், 45, ஓட்டினார்.
நேற்று காலை, 7:15 மணிக்கு சங்ககிரி அருகே ஒருக்காமலை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிரே ஓமலுாரில் ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் டிரைவர் செல்வம், 45, தொழிலாளர்களான சின்னபிள்ளை, 60, பச்சியம்மாள், 45, ஆகியோர் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தவிர, 9 தொழிலாளர்கள், பஸ்சில் பயணித்த தமிழரசி, 41, ஆகியோர் லேசான காயம் அடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.