Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் சிலவரி செய்திகள்..

சேலம் சிலவரி செய்திகள்..

சேலம் சிலவரி செய்திகள்..

சேலம் சிலவரி செய்திகள்..

ADDED : ஜூன் 17, 2024 01:26 AM


Google News
விவசாயிகளுக்கு கருவி வழங்கல்

வீரபாண்டி,: வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் கடத்துார் அக்ரஹாரம் வேளாண் விரிவாக்க மையத்தில், வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்தார். வீரபாண்டி அட்மா குழு தலைவர் வெண்ணிலா சேகர், மண் சட்டி, கடப்பாரை, அரிவாள், களைக்கொத்து, மண் வெட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் அடங்கிய தொகுப்புகள், மானிய விலையில் தார்ப்பாய்களை, தேர்வு செய்யப்பட்ட, 30 விவசாயிகளுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி விதை அலுவலர் சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

விபத்தில் வாலிபர் பலி: டிரைவர் கைதுகெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன், 55. இவரது மகளின் திருமண நிகழ்ச்சிக்கு, சென்னை, அம்பத்துாரில் இருந்து வந்த உறவினர்களான யுவன் ராஜேஷ்குமார், 21, தினேஷ், 26, கெங்கவல்லியை சேர்ந்த, சிறுவன் தரணிஷ், 13, ஆகியோர், 'டிவிஎஸ் - ஸ்கூட்டி' மொபட்டில் நேற்று காலை, 10:00 மணிக்கு கெங்கவல்லி நோக்கி சென்றனர். பின் அதே மொபட்டில் திரும்பி வந்தபோது, பழங்கள் ஏற்றி வந்த மினி சரக்கு ஆட்டோ, மொபட் மீது மோதியது. இதில் யுவன்ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். கெங்கவல்லி போலீசார், ஆத்துாரை சேர்ந்த, மினி சரக்கு வேன் டிரைவர் அருள்ஜோதி, 32, என்பவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us