ADDED : செப் 18, 2025 02:26 AM
ஏற்காடு :ஏற்காட்டில் நேற்று மாலை, 4:20 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழை, 6:30 மணி வரை கொட்டி தீர்த்தது.
பின் லேசான மழையாக மாறியது. பின் இரவு, 8:50க்கு மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி, 9:45 மணி வரை கொட்டியது. அதேநேரம் ஏற்காடு முழுதும் கடும் பனிமூட்டம் சூழ்ந்து, அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத சூழல் நிலவியது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் ஓட்டிச்சென்றனர்.