/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி 21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி
21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி
21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி
21 தியாகிகளுக்கு பா.ம.க.,வினர் அஞ்சலி
ADDED : செப் 18, 2025 02:27 AM
அயோத்தியாப்பட்டணம் :கடந்த 1987 செப்., 17ல், வன்னியர் சங்கம் சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில், 21 பேர் உயிரிழந்தனர். அந்த தியாகிகளின் படங்களை அலங்கரித்து, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பஸ் ஸ்டாப் பகுதியில், பா.ம.க.,வின் சேலம் வடக்கு மாவட்ட செயலர் செல்வம் தலைமையில் கட்சியினர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நகர செயலர் மணி, ஒன்றிய செயலர்கள் மாது, சதீஷ்குமார், குமரவேல், அசோக்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்ககிரியில், நகர செயலர் அய்யப்பன் தலைமையில், மாவட்ட துணை செயலர் சுப்ரமணி உள்ளிட்ட கட்சியினர், அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தாரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில், பா.ம.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.