/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் புகார் ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் புகார்
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் புகார்
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் புகார்
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அறக்கட்டளை நிர்வாகி மீண்டும் புகார்
ADDED : செப் 18, 2025 02:26 AM
சேலம்,மேச்சேரி அருகே உள்ள சத்யபாமா அறக்கட்டளை தலைவர் சத்தியபாமா உள்பட சில பெண்கள், கடந்த மாதம் சேலம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதில், அறக்கட்டளையில், 'ரிசர்வ் வங்கி' பெயரை கூறி, 1.50 கோடி ரூபாயை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சத்யபாமா, நேற்று, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தார். அப்போது, பணத்தை மீட்டு தரக்கோரி மீண்டும் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து சத்யபாமா கூறியதாவது: எங்கள் அறக்கட்டளையில் இருக்கக்கூடிய, 2,000 வாடிக்கையாளர்களிடம், 5,000, 10,000 என, 1.50 கோடி ரூபாய் வசூல் செய்து, பணத்தை சிலரிடம் கொடுத்தேன். தற்போது நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என தெரியவந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன், டி.எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தேன். முறையாக விசாரித்து, எங்களிடம் பணம் பெற்றவர்களை கைது செய்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.