/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம் பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பா.ஜ., அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 03:42 AM
சேலம்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த, பா.ஜ., அரசை கண்டித்து, சேலம், கோட்டை மைதானத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது. அதற்கு தலைமை வகித்து, சேலம் எம்.பி., செல்வகணபதி பேசியதாவது:
நாம், 6 லட்சம் கோடி ரூபாயை வரியாக கொடுக்கும் நிலையில், மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாயை மட்டும் திருப்பி கொடுக்கிறது. வெள்ள நிவாரணத்துக்கு, 37,000 கோடி ரூபாய் கேட்டதற்கு வெறும், 200 கோடி தான் கொடுத்தார்கள். ஆட்-சியை காப்பாற்றிக்கொள்ள ஆந்திராவுக்கும், பீகாருக்கும் அதிக நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணிப்பதால், 8 கோடி மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்-வாறு அவர் பேசினார். முன்னிலை வகித்து, எம்.எல்.ஏ., ராஜேந்-திரன் பேசுகையில், ''மத்திய பட்ஜெட் மூலம் மாபெரும் துரோ-கத்தை மோடி, தமிழகத்துக்கு செய்திருக்கிறார்.
நிதிநிலை அறிக்கை என்பது அனைத்து மாநிலத்துக்கும் சமமான-தாகவும், வரிச்சலுகையும் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்-துக்கு நிதி ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்-திய அரசு நடந்து கொள்கிறது,'' என்றார்.
முன்னிலை வகித்து, கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசு-கையில், ''மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த நிர்-மலா சீதாராமன், பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாம்,'' என்றார்.
முன்னதாக மத்திய அரசை கண்டித்து கண்டன குரல் எழுப்பினர். மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர்கள் கார்த்திகேயன், ஸ்ரீராம், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.