'பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்'
'பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்'
'பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்'
ADDED : ஜூலை 28, 2024 03:42 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே, வி.கூட்ரோட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லுாரியில், 3ம் ஆண்டு, விடுதி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வக்குமார், கல்லுாரி ஆண்டு விழா மலரை வெளியிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: கடந்த, 2014 - 15ல், விவசாய வருமானத்தில் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைத்த வரு-மானம், 24 சதவீதமாக இருந்தது. 2021ல், 30 சதவீதமாக உயர்ந்-தது. பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு, 30 சத-வீதம். இறைச்சி உற்பத்தியில், இந்தியா, 5ம் இடத்தில் உள்ளது.
கால்நடை மருத்துவ படிப்புக்கு அரசு, தனியார் துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதை விட மாணவர்கள் வேலைவாய்ப்பு தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்பு-களை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கல்லுாரி முதல்வர் இளங்கோ, விடுதி காப்பாளர் கலைக்-கண்ணன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.