Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முன்னோர்களுக்கு தர்ப்பணம்;ஏராளமானோர் வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம்;ஏராளமானோர் வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம்;ஏராளமானோர் வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம்;ஏராளமானோர் வழிபாடு

ADDED : செப் 22, 2025 01:29 AM


Google News
சேலம்:நுமகாளய அமாவாசையையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனப்பகுதியில் திதி, தர்ப்பணம் கொடுக்க, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனால் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கே ஏராளமானோர், குலம், கோத்திரம், இறந்தவர்களின் பெயர்களை கூறி சங்கல்பம் செய்து, எள் தண்ணீரை ஊற்றி தர்ப்பணம் செய்தனர். மதியம், 1:00 மணி வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, தர்ப்பணம் கொடுத்து காய்கறியை தானம் வழங்கியும், பசுக்களுக்கு கொடுத்தும் சென்றனர்.அதேபோல் சுகவனேஸ்வரர் கோவில் எதிரே வாசவி சுபிக்ஷா மண்டப வளாகம், கோட்டை அழகிரிநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில்கள், கன்னங்குறிச்சி மூக்கனேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சித்தர்கோவில்இளம்பிள்ளை அருகே சித்தர்கோவிலில், ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். மேலும் சித்தமுனியப்பன் கோவில் அருகே உள்ள வளாகத்தில் முன்னோர்களுக்கு எள், அரிசி மாவு ஆகியவற்றுடன் தர்ப்பணம், பிண்டம் வைத்து வணங்கினர்.மேட்டூர் காவிரி பாலம் அடிவாரம், மட்டம், எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரம் என, 3 இடங்களில், ஏராளமானோர் காவிரி ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு அரிசி, காய்கறி வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பண்ணவாடி, கோட்டையூர், கூனாண்டியூர் மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதிகளில், வாழப்பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் பின்புறமும், ஏராளமான மக்கள், தர்ப்பணம் கொடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us