/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முனியப்பனுக்கு சிறப்பு பூஜை:தேவிக்கு வரமிளகாய் யாகம் முனியப்பனுக்கு சிறப்பு பூஜை:தேவிக்கு வரமிளகாய் யாகம்
முனியப்பனுக்கு சிறப்பு பூஜை:தேவிக்கு வரமிளகாய் யாகம்
முனியப்பனுக்கு சிறப்பு பூஜை:தேவிக்கு வரமிளகாய் யாகம்
முனியப்பனுக்கு சிறப்பு பூஜை:தேவிக்கு வரமிளகாய் யாகம்
ADDED : செப் 22, 2025 01:28 AM
சேலம்;மகாளய அமாவாசையை ஒட்டி, சேலம், குரங்குச்சாவடியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு பரிவட்டம் கட்டி, சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்து, மந்திரித்த கயிறுகளை கைகளில் கட்டிச்சென்றனர். இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கும், பூஜை போட்டு எடுத்துச்சென்றனர்.
அதேபோல் பொன்னம்மாபேட்டை மன்னார்பாளையம் பிரிவு சாலையில் உள்ள பிரித்யங்கிரா தேவி கோவிலில், உலக நன்மைக்கு, 500 கிலோ வரமிளகாய்களால் யாகம் நடந்தது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீரால் அபிேஷகம் செய்து, சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.'நாகாத்தாம்மாள்'தாரமங்கலம், பாப்பம்பாடி, சந்தைப்பேட்டையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 'நாகாத்தாம்மாள்' அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி சுவேத நதி தென்கரையில் உள்ள மாசி பெரியசாமி கோவிலில் மிளகாய் யாக பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மிளகாய், கடுகு, மூலிகை பொருட்களை, யாக குண்டத்தில் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆத்துார், கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்துார் பெரியமாரியம்மன், ஆறகளூர் காமநாதீஸ்வரர், அம்பாயிரம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், பொன்னாளியம்மன், கொத்தாம்பாடி முனீஸ்வரன் உள்ளிட்ட கோவில்களில், மகாளய அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.