/உள்ளூர் செய்திகள்/சேலம்/ களையிழந்த கறிக்கடைகள்;காளான் விற்பனை 'ஜரூர்' களையிழந்த கறிக்கடைகள்;காளான் விற்பனை 'ஜரூர்'
களையிழந்த கறிக்கடைகள்;காளான் விற்பனை 'ஜரூர்'
களையிழந்த கறிக்கடைகள்;காளான் விற்பனை 'ஜரூர்'
களையிழந்த கறிக்கடைகள்;காளான் விற்பனை 'ஜரூர்'
ADDED : செப் 22, 2025 01:30 AM
சேலம்:புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலோர் அசைவ உணவை தவிர்த்துவிடுவர். அதேநேரம் புரட்டாசி பிறந்து, அதன் முதல் ஞாயிறான நேற்று, மகாளய அமாவாசை வந்தது.
இதனால் சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில், வழக்கம்போல் இல்லாமல் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. அதேபோல் நகரின் அனைத்து பகுதிகளிலும், கோழி, ஆடு இறைச்சி கடைகளில் கூட்டமின்றி காணப்பட்டது. அசைவ உணவு பிரியர்கள், காளான் வாங்கி சாப்பிட்டனர்.
இதுகுறித்து காளான் விற்பனையாளர்கள் கூறியதாவது: காளானின் பட்டன், சிப்பி, பால் காளான் உள்ளிட்ட வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் பால் காளான் அதிகளவில் உணவில் சேர்க்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஓமலுார், மேட்டூர், ஆத்துார், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது புரட்டாசியால், காளான் விற்பனை அதிகரித்துள்ளது. குழம்பு வகைகள், வறுவல், பிரியாணி, ஊறுகாய் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வழக்கத்தை விட இன்று(நேற்று) காளான் விற்பனை, 30 முதல், 40 சதவீதம் அதிகரித்தது. 200 கிராம் கொண்ட காளான் பாக்ஸ், 35 முதல், 45 ரூபாய் வரை விற்பனையானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.