ADDED : மார் 23, 2025 01:01 AM
சிறை வார்டன் இடமாற்றம்
சேலம்:சேலம் மத்திய சிறை தலைமை வார்டன்கள் சித்திரை செல்வன், முருகேசன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்த போலீஸ்காரர் சேட்டு, பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அதேபோல் பெண்கள் கிளை சிறையில் பணியாற்றிய வார்டன் பவித்ரா புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறைக்குள் ஏற்பட்ட புகார்கள் குறித்து, இந்த நிர்வாக இடமாறுதல் செய்யப்பட்டதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.