கஞ்சா விற்பனைமூதாட்டிக்கு 'காப்பு'
கஞ்சா விற்பனைமூதாட்டிக்கு 'காப்பு'
கஞ்சா விற்பனைமூதாட்டிக்கு 'காப்பு'
ADDED : மார் 23, 2025 01:00 AM
கஞ்சா விற்பனைமூதாட்டிக்கு 'காப்பு'
சேலம்:சேலம், எருமாபாளையம் அய்யந்திருமாளிகையில், நேற்று முன்தினம், அம்மாபேட்டை போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது கந்தாயி, 65, என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததால், அவரை கைது செய்து, 11,000 ரூபாய் மதிப்பில், 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி ரவுண்டானா பகுதியில், கஞ்சா விற்ற, சேலம் டவுன், பாண்டியராஜன் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு, 24, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கல்லுாரி மாணவி மாயம்
சேலம்:
சேலம், ஜாகீர் ரெட்டிப்பட்டி டாக்டர்ஸ் காலனியை சேர்ந்த ராஜா மகள் ஹரிதா, 19. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.