Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கடை ஏலம் விடுவதில் குளறுபடி செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

கடை ஏலம் விடுவதில் குளறுபடி செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

கடை ஏலம் விடுவதில் குளறுபடி செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

கடை ஏலம் விடுவதில் குளறுபடி செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

ADDED : ஜூலை 06, 2024 08:48 AM


Google News
மேட்டூர் : சேலம் மாவட்டம் மேச்சேரி டவுன் பஞ்சாயத்து தலைவி சுமதி. இவரது கணவர், தி.மு.க.,வை சேர்ந்த, மேச்சேரி ஒன்றிய செயலர் சீனிவாசபெ-ருமாள். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கோபால். இவர் அங்கு ஓராண்டாக பணிபுரி-கிறார். இவரிடம் சமீபத்தில் சில கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து கடைகளை ஏலம் விட கோரிக்கை விடுத்தனர்.

அப்போது கவுன்சிலர்கள் கூறியதாவது:

பஸ் ஸ்டாண்ட் கடைகள், சைக்கிள் நிறுத்தும் இடம், பத்ரகாளியம்மன் கோவில் அருகே மற்றும் ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள கடைகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏலம் விடப்படவில்லை. அதற்கு பதில் ஓராண்டு அல்-லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மட்டும், 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. டவுன் பஞ்சாயத்து கடைகளை ஏலம் விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து, கடைகளை ஏலம் விடுவதாக அறிவித்த செயல் அலுவலர், பின் ரத்து செய்து-விட்டார். மேலும் கடை உரிமையாளர்களே, அவரவர் குடும்பத்தினரை ஏல தொகை நிர்ண-யித்து காசோலை தயார் செய்துள்ளனர். கடை-களை ஏலம் விடுவதில் நடந்த குளறுபடி தொடர்-பாக, உள்ளாட்சி துறை அமைச்சர், கலெக்டர் கவனத்துக்கு புகார்

சென்றது.

இதையடுத்து கடந்த, 3ல், கோபாலை, 'சஸ்பெண்ட்' செய்து கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், பி.என்.பட்டி செயல் அலுவலர் ரேணுகா-வுக்கு, கூடுதல் பொறுப்பாக மேச்சேரி வழங்கப்-பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us