Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கே.ஆர்.எஸ்., நீர்மட்டம் 'சதம்'

கே.ஆர்.எஸ்., நீர்மட்டம் 'சதம்'

கே.ஆர்.எஸ்., நீர்மட்டம் 'சதம்'

கே.ஆர்.எஸ்., நீர்மட்டம் 'சதம்'

ADDED : ஜூலை 06, 2024 08:47 AM


Google News
மேட்டூர் : கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை மொத்த நீர்-மட்டம், 124.8 அடி.

நீர் இருப்பு, 49.5 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகு-தியில் தென்மேற்கு

பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த ஏப்., 25ல், 82.09 அடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்-மட்டம், படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று அணை நீர்மட்டம், 100.5 அடி, நீர் இருப்பு, 23 டி.எம்.சி.,யாக உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஜூலை, 5ல் கே.ஆர்.எஸ்., நீர்-மட்டம், 78.09 அடி, நீர் இருப்பு, 11 டி.எம்.சி.,யாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது அணை நீர்மட்டம், 22 அடி, நீர்இருப்பு, 11 டி.எம்.சி., கூடுதலாக உள்ளது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினா-டிக்கு, 1,223 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 1,241 கன அடியாக சற்று உயர்ந்தது. அதேபோல், 39.67 அடியாக இருந்த அணை நீர்-மட்டம், 39.70 அடியாக சற்று உயர்ந்தது. இந்நி-லையில் நேற்று மாலை, மேட்டூர் அணை சுற்-றுப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்-தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us