/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா? ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா?
ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா?
ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா?
ஒரே பரிசலில் 20 பேர் பயணம் விபரீதத்துக்கு முன் விழிப்பரா?
ADDED : ஜூலை 07, 2024 01:18 AM
மேட்டூர் : காவிரியாற்றில் ஒரே பரிசலில், 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்-பற்ற முறையில் பயணிப்பதால், விபரீதம் ஏற்படும் முன் அதிகா-ரிகள் விழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையின் கோட்டையூரில் இருந்து அதன் மறுக-ரையில் உள்ள ஒட்டனுாருக்கு பயணியர் விசைப்படகு இயக்கப்-பட்டது.
அதன் ஒப்பந்தம் முடிந்த நிலையில், விலைப்புள்ளி அதிகம் இருந்ததால், ஏலம் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வர-வில்லை. தற்போது அணை நீர்மட்டத்துக்கேற்ப, கோட்டையூர் நீர்பரப்பு பகுதியிலும் காவிரியாற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் கடந்த இரு மாதங்களாக, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்-றிய கமிஷனர் உத்தரவு மூலம் குறுகிய அகலம் கொண்ட காவிரி-யாற்றில் பெரிய பரிசலில், பயணியரை ஏற்றிச்சென்று மறுக-ரையில் விடுகின்றனர்.
அதற்கு கட்டணமாக பயணியருக்கு, 20 ரூபாய், இருசக்கர வாக-னங்களுக்கு, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதற்கு பயணச்-சீட்டு வழங்குவதில்லை. அத்தொகையை பரிசல் ஓட்டும் ஊழியர்-களே வசூலித்து, ஒன்றிய அலுவலரிடம் ஒப்படைக்கின்றனர்.
ஆனால் ஒரே பரிசலில், 20க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்-றனர். அவர்கள் பாதுகாப்பு உடைகள் அணியாமல், ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை கடக்கின்றனர்.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் விழித்து, பயணியரை பாதுகாக்க வேண்டும். அத்துடன் கட்டண சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.