/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆசிரியையை தாக்கி 6 பவுன் தாலி பறிப்பு ஆசிரியையை தாக்கி 6 பவுன் தாலி பறிப்பு
ஆசிரியையை தாக்கி 6 பவுன் தாலி பறிப்பு
ஆசிரியையை தாக்கி 6 பவுன் தாலி பறிப்பு
ஆசிரியையை தாக்கி 6 பவுன் தாலி பறிப்பு
ADDED : ஜூலை 03, 2024 07:35 AM
தலைவாசல் : தலைவாசல் அருகே சாத்தப்பாடியை சேர்ந்த முருகானந்தம் மனைவி மகாலட்சுமி, 30. ஆத்துாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவரது, 4 வயது மகன் சதீஷூக்கு, நேற்று உடல்நிலை சரியில்லாததால் தலைவாசலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, 'ஸ்கூட்டி' மொபட்டில் அழைத்துச்-சென்றார்.
பின் இரவு, 8:00 மணிக்கு சார்வாய் ரயில்வே கேட் வழியே, சாத்தப்பாடிக்கு புறப்பட்டார். அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், மொபட்டை மறித்து மகாலட்சுமியை தாக்கினர். தொடர்ந்து அவர் அணிந்திருந்த, 6 பவுன் தாலிக்கொ-டியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர். மகாலட்சுமி கூச்ச-லிட, மக்கள், அந்த நபர்களை விரட்டிச்சென்றும் பிடிக்க முடிய-வில்லை. இதுகுறித்து மகாலட்சுமி புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.நீதிமன்ற ஊழியர்
சேலம், மாசிநாயக்கன்பட்டி, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 39. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஊழிய-ராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு, பணி முடிந்து வீடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து நடந்து வந்த மர்ம நபர், ஜெயலட்சுமி அணிந்தி-ருந்த, 5.5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி-விட்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.