/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரேஷன் கடையில் முறைகேடு விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' ரேஷன் கடையில் முறைகேடு விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'
ரேஷன் கடையில் முறைகேடு விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'
ரேஷன் கடையில் முறைகேடு விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'
ரேஷன் கடையில் முறைகேடு விற்பனையாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 03, 2024 07:35 AM
சேலம் : சேலம், மணியனுார் சந்தை, எம்.ஜி.ஆர்., நகர் ரேஷன் கடையால், 720 குடும்பத்தினர் பயன்பெறுகின்றனர். அதில் சில-ருக்கு பொருட்கள் வழங்கப்படாத நிலையில், அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை வாங்கியதாக, நேற்று குறுந்தகவல் வந்-தது. அதிர்ச்சி அடைந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது:
சில மாதங்களாக பொருட்கள் வாங்காமல் தொடர்ந்து வாங்கிய-தாக, குறுந்தகவல் வந்து கொண்டிருந்தது. எங்களுக்கு மட்டும் என நினைத்திருந்த நிலையில், இங்கு பலருக்கும் இதுபோல் நடந்துள்ளது. விற்பனையாளர் கண்ணன் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து ரேஷன் கடையில் இருந்து வருகிறார். முறைகேடுகளை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் கலெக்டர் பிருந்தாதேவி, கூட்டுறவு துறை சார்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி விற்பனை-யாளர் கண்ணனை, தற்காலிக பணிநீக்கம் செய்து, துணை பதி-வாளர் யேசுஸ்டீபன்ராஜ் உத்தரவிட்டார்.