Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துணைவியுடன் 'தொடர்பு' இருப்பதாக சந்தேகம் ஆலை தொழிலாளியை கொன்றவர் வாக்குமூலம்

துணைவியுடன் 'தொடர்பு' இருப்பதாக சந்தேகம் ஆலை தொழிலாளியை கொன்றவர் வாக்குமூலம்

துணைவியுடன் 'தொடர்பு' இருப்பதாக சந்தேகம் ஆலை தொழிலாளியை கொன்றவர் வாக்குமூலம்

துணைவியுடன் 'தொடர்பு' இருப்பதாக சந்தேகம் ஆலை தொழிலாளியை கொன்றவர் வாக்குமூலம்

ADDED : ஜூலை 03, 2024 07:35 AM


Google News
மேட்டூர்: துணைவியுடன், 'தொடர்பு' இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் பிளாஸ்டிக் ஆலை தொழிலாளியை கொன்றதாக, அவரது உற-வினர் வாக்குமூலம் அளித்தார். அவர் உள்பட, 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம், கருப்பூர், உப்புகிணற்றை சேர்ந்தவர் சுபாஷ் சந்தி-ரபோஸ், 25. திருமணம் ஆகவில்லை. மேச்சேரி, எம்.என்.பட்டி ஊராட்சி அரங்கனுாரில் பிளாஸ்டிக் சாக்கு மறுசுழற்சி செய்யும் ஆலையில் பணிபுரிந்தார். கடந்த, 28ல் அங்கு வந்த ஒருவர், சுபாஷ் சந்திர போ ைஸ அரிவாளால் வெட்டி கொலை செய்தார். சில நாட்களாக தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

நேற்று, சேலம் அருகே மின்னாம்பள்ளியில் இருந்த கொலை-யாளி வெங்கடேசன், 31, அவருக்கு உடந்தையாக இருந்ததாக காமனேரி தினேஷ், 25, ஆகியோரை, மேச்சேரி போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

திருமணமான வெங்கடேசன், மனைவியை விட்டு பிரிந்து மற்-றொரு பெண்ணான தேன்நிலவு, 40, என்பவருடன் பொம்மியம்-பட்டியில் வசிக்கிறார். சுபாஷ் சந்திரபோஸ், வெங்கடேசன் உறவி-னர்கள். சுபாஷ் சந்திர போஸூக்கும், தேன்நிலவுக்கும், 'தொடர்பு' இருப்பதாக வெங்கடேசன் சந்தேகம் அடைந்துள்ளார். இதில் கடந்த, 25ல் தேன்நிலவு வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன், கடந்த, 28ல் காம-னேரி சென்று அவரது நண்பர் தினேஷூடன், டி.வி.எஸ்., மொபட்டில் அரங்கனுார் சென்றார். அங்கு ஆலையில் இருந்த சுபாஷ் சந்திர போஸிடம், தேன்நிலவு குறித்து கேட்டுள்ளார். அவர் தெரியவில்லை என கூற அவர்கள் இடையே தகராறு ஏற்-பட்டது. அதில் வெங்கடேசன், அரிவாளால் சுபாஷ் சந்திர போைஸ வெட்டி கொலை செய்தார்.

பின் சேலம், பெங்களூரு என பல ஊர்களில் சுற்றி திரிந்த வெங்கடேஷ் நேற்று சேலம் அருகே மின்னாம்பள்ளியில் இருந்தார். அவரை கைது செய்து விசாரித்தபோது, தேன்நில-வுடன், 'தொடர்பு' இருப்பதாக சந்தேகம் இருந்ததால், சுபாஷ் சந்-திர போ ைஸ கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். அவரிடம் அரிவாளை பறிமுதல் செய்துள்ளோம். அதேபோல் காமனேரியில் இருந்த தினே ைஷயும் கைது செய்து மொபட்டை பறிமுதல் செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us