/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் தடுமாற்றம் குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூலை 21, 2024 09:41 AM
பனமரத்துப்பட்டி, : சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, தாசநாயக்-கன்பட்டியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகி-றது. அதற்கு பிரதான சாலை மூடப்பட்டு சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. கிழக்கு பகுதி சர்வீஸ் சாலை-யோரம், நிலவாரப்பட்டி மயான நுழைவு பகு-தியில் குப்பை கொட்டப்படுகிறது. அதற்கு தீ வைத்து விடுவதால், புகை மண்டலம் சாலை முழுதும் பரவுகிறது.
இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. குறிப்பாக சாலையை புகை மறைத்துவிடுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் டிரைவர்கள் தடுமாற்றம் அடைகின்-றனர். மழை காலங்களில் கால்வாய் உள்ளே குப்பை அடைத்துக்கொள்கின்றன. இதனால் நெஞ்சாலையில் மழைநீர் தேங்கி போக்குவ-ரத்தும் பாதிக்கிறது. இதற்கு நெடுஞ்சாலை-யோரம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க, அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.