/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : ஜூலை 21, 2024 09:41 AM
சேலம், : குறைந்த வாடகையில் வேளாண் பணிகளுக்-கான இயந்திரங்களை எடுத்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்-வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வேளாண் பொறியியல் துறை சார்பில் பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும், 5 புல்டோசர், 12 டிராக்டர்கள், ஒரு டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம், 3 டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள், ஒரு தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஆகியவை, இ - வாடகை செயலி மூலம் வழங்கப்பட்டு வருகி-றது.நிலத்தை சமன்படுத்தல், உயர்பாத்தி அமைத்து விதைத்தல், கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல், அறுவடை, பல்வேறு பயிர்களை கதிர-டித்தல், வைக்கோல் கட்டுதல், நிலத்தில் நிலக்க-டலை பயிரை தோண்டி எடுத்து நிலக்கடலையை பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்-கொள்ள, டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்-களும் வாடகைக்கு விடப்படுகின்றன.இக்கருவிகள் டிராக்டருடன் மணிக்கு, 500 ரூபாய் என்ற குறைந்த வாடகை அடிப்படையில், முன்-னுரிமைப்படி வாடகைக்கு வழங்கப்படுகிறது. இ - வாடகை செயலி மூலம் வீட்டில் இருந்தே முன்-பதிவு செய்து பயன்பெறலாம். சேலம் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளரை, 0427 - 2906266, 94432 49323 என்ற எண்களில் அழைக்-கலாம்.