ADDED : ஜூலை 21, 2024 09:41 AM
கெங்கவல்லி : மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை தொடங்கி வைத்தார்.
கண், பல், காது, எலும்பு, சித்தா, பொது மருத்-துவம் உள்ளிட்டவைக-ளுக்கு சிகிச்சை அளிக்-கப்பட்டது. இதில் நாகியம்பட்டி, உலிபுரத்தை சேர்ந்த, 272 பெண்கள் உள்பட, 833 பேர் பயன்-பெற்றனர். 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட-வற்றில், 22 பேருக்கு தானிய பெட்டகம், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் வேலுமணி உள்-ளிட்ட மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.