Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடலுறுப்புகள் தானம்

ADDED : மார் 23, 2025 01:10 AM


Google News
மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடலுறுப்புகள் தானம்

புன்செய்புளியம்பட்டி:விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லுாரி மாணவரின் உடலுறுப்புகளை, புன்செய்புளியம்பட்டி பெற்றோர் தானம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி, நேரு நகரை சேர்ந்த நாகராஜ்-விஜயலட்சுமி தம்பதி மகன் யாதவ், 20; கோவை தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர். கடந்த, 19ம் தேதி கோவையில் டூவீலரில் சென்றபோது விபத்தில் காயமடைந்தார்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மகன் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். கல்லீரல், இருதயம், கண் விழித்திரை, சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இந்நிலையில் யாதவின் உடல், சொந்த ஊரான புன்செய்புளியம்பட்டிக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.

அங்கு அரசு சார்பில் சத்தி தாசில்தார் ஜமுனாராணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து யாதவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.

அதன் பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புளியம்பட்டி எரிவாயு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us