/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : மார் 23, 2025 01:10 AM
ஊட்டி மலைப்பாதையில்சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சேலம்:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மலை ரயில் பாதையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி குன்னுார் - உதகமண்டலம் சிறப்பு ரயில், வரும், 28 முதல் ஜூலை, 7 வரை, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை, 8:20க்கு புறப்பட்டு, 9:40க்கு உதக மண்டலத்தை அடையும். மறுமார்க்க ரயில் அதே நாட்களில் மாலை, 4:45க்கு கிளம்பி, 5:55க்கு குன்னுாரை அடையும்.
அதேபோல் குன்னுார் - உதகமண்டலம் இடையே மற்றொரு சிறப்பு ரயில் மார்ச், 28 முதல் ஜூலை, 6 வரை, வெள்ளி, ஞாயிறு மதியம், 2:50க்கு புறப்பட்டு, 3:55க்கு உதகமண்டலத்தை அடையும். மறுமார்க்க ரயில், சனி, திங்கள் காலை, 9:20க்கு கிளம்பி, 10:45க்கு குன்னுாரை அடையும். மேலும் மார்ச், 28 முதல் ஜூலை, 7 வரை வெள்ளி, சனி, ஞாயிறு, திங்களில், உதகமண்டலத்தில் இருந்து கெத்தி ஸ்டேஷன் சென்று மீண்டும் உதகமண்டலம் திரும்பும், 'ரவுண்ட் டிரிப்', ஒரு நாளைக்கு, 3 முறை இயக்கப்படும்.