/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'தண்ணீரே வர்றது இல்ல; வரி மட்டும் கேட்டு வர்றீங்க...'நகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம் 'தண்ணீரே வர்றது இல்ல; வரி மட்டும் கேட்டு வர்றீங்க...'நகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்
'தண்ணீரே வர்றது இல்ல; வரி மட்டும் கேட்டு வர்றீங்க...'நகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்

ADDED : மார் 23, 2025 01:09 AM
'தண்ணீரே வர்றது இல்ல; வரி மட்டும் கேட்டு வர்றீங்க...'நகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்
ஆத்துார்:'குடிநீரே முறையாக வருவது இல்லை. ஆனால் வரி மட்டும் கேட்டு வர்றீங்க' என கேட்டு, நகராட்சி அலுவலர்களை சிறைபிடித்து, மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அதில், 10வது வார்டு, வடக்கு தில்லை நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு குடிநீர் நிலுவை வரி வசூலிக்க, நகராட்சி பொறியாளர் ஜெயமாலினி, பணி மேற்பார்வையாளர் சுரேஷ் நேற்று சென்றனர். அப்போது, 'குடிநீர் வரி செலுத்தவில்லை எனில், அதன் இணைப்பு துண்டிக்கப்படும்' என்றனர்.
அதற்கு மக்கள், 'எங்கள் பகுதிக்கு, 18 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் உள்ளது. அதுவும் முறையாக வருவதில்லை. ஆனால், குடிநீர் கட்டணம் மட்டும் எப்படி வசூலிக்கலாம். மேலும் இணைப்பு துண்டிப்பதாக எதற்கு கூறுகிறீர்கள்' என, கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது சில அலுவலர்கள், தகாத வார்த்தையில் பேசினர். இதில் ஆத்திரமடைந்த மக்கள், அலுவலர்களை சிறைபிடித்தனர். அப்போது அலுவலர்கள், மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். மக்களும் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர்.
மக்களில் ஒருவரது போனை, அலுவலர் ஒருவர் தட்டிவிட்டதில் கீழே விழுந்தது. வாக்குவாதம் முற்றியது. அங்கு வந்த ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்தி, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலர்களை, மீட்டு அனுப்பி வைத்தனர்.