/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாரியம்மன் கோவிலுக்கு தயாராகும் மரத்தேர்ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு மாரியம்மன் கோவிலுக்கு தயாராகும் மரத்தேர்ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு
மாரியம்மன் கோவிலுக்கு தயாராகும் மரத்தேர்ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு
மாரியம்மன் கோவிலுக்கு தயாராகும் மரத்தேர்ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு
மாரியம்மன் கோவிலுக்கு தயாராகும் மரத்தேர்ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு
ADDED : மார் 23, 2025 01:03 AM
மாரியம்மன் கோவிலுக்கு தயாராகும் மரத்தேர்ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு
சேலம்:கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு மரத்தேர் தயாராகி வரும் நிலையில், ஆடி திருவிழாவில் தேரோட்டம் நடத்த, அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தேர் செய்யப்படுகிறது. விரைவில் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. ஆடி மாதம் புது தேரில் தேரோட்டம் நடக்க உள்ளது. அப்போது போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கடந்த டிச., 20ல் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அவர், தேரோட்ட விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுப்பதோடு, விழா தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை பின்பற்ற உத்தரவிட்டார். இந்நிலையில் சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், உபயதாரர்
கள், கோவில் நிதியில், 1 கோடி ரூபாய் மதிப்பில், 16 அடி அகலம், 37 அடி உயரத்தில், 6 இரும்பு சக்கரங்கள், 3 ஆக்சில் கொண்ட பிரமாண்ட மரத்தேர் செய்யும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர் வெள்ளோட்டம் விடுவதற்கான முன்னேற்பாடு குறித்து, கோவில் வளாகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் 'தேர் செய்யும் பணி, 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணி முடிய இன்னும், 45 நாட்கள் ஆகும். தேரோட்டம், கோவில் ராஜகோபுரம் முன் தொடங்கி, முதல் அக்ரஹாரம், தேர்வீதி, 2ம் அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்ன கடைவீதி, பஜார் தெரு வழியே மீண்டும் கோவிலை அடையும்படி ஆண்டுதோறும் நடக்கும். நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு ஆக., 8ல் தேரோட்டம் நடத்த தேவையான ஏற்பாடு, அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது' என, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர் குழு தலைவர்
சக்திவேல் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட சிறப்பு நிர்வாக நடுவர் பாலாஜி, சேலம் தாசில்தார் தாமோதரன், மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி, அம்மாபேட்டை மண்டல உதவி கமிஷனர் வேடியப்பன், வருவாய், போலீஸ், மின்சாரம், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். தொடர்ந்து தேர் பணிகளை பார்வையிட்ட அதிகாரிகள், தேரோட்டம் நடக்கும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு, மின் கம்பிகள் இடையூறு உள்ளிட்டவற்றை சரிசெய்வது குறித்து ஆய்வு செய்தனர்.