/உள்ளூர் செய்திகள்/சேலம்/டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?
டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?
டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?
டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 28, 2024 02:09 AM
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா
டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் கணவாய்புதுார், லோக்கூர், பொம்மியம்பட்டி, பெலாப்பள்ளி கோம்பை ஆகிய காப்புக்காடு பகுதிகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும், மலை கிராமங்கள், வனப்பகுதியில் சாராயம் விற்பனை உள்ளதாகவும் புகார்
எழுந்துள்ளது.
இதை தடுக்க, 2019 நவம்பரில் டேனிஷ்பேட்டை வனத்துறை சார்பில் லோக்கூர், வனப்பகுதி முனியப்பன் கோவில் அருகே சோதனைச்சாவடி அமைக்க இடம் தேர்வு
செய்யப்பட்டு ஒப்புதல் கேட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால் மாவட்ட நிர்வாகம், கள்ளக்குறிச்சி, கருணாபுரம் சம்பவம் போன்று நிகழ்வதை தடுக்க, சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அதனால் போலீஸ் அல்லது வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைத்தால், பெங்களூருவில் இருந்து பொம்மிடி வழியே சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்ட கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியும்.