/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீ ரூ.25 லட்சம் பொருட்சேதம் சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீ ரூ.25 லட்சம் பொருட்சேதம்
சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீ ரூ.25 லட்சம் பொருட்சேதம்
சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீ ரூ.25 லட்சம் பொருட்சேதம்
சவுண்ட் சர்வீஸ் குடோனில் தீ ரூ.25 லட்சம் பொருட்சேதம்
ADDED : ஜூன் 28, 2024 02:08 AM
சேலம், சேலம், குகை, திருச்சி பிரதான சாலையை சேர்ந்தவர் பாஸ்கர், 59. இவர், பழைய பஸ் ஸ்டாண்ட், திருமணிமுத்தாற்றின் கரையோரம், 'தங்கம் மூவி லைட்ஸ்' பெயரில், சவுண்ட் சர்வீஸ் கடை நடத்துகிறார்.
இந்த வீட்டின் மேல் மாடியில், அவரது குடோன் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு புகை வந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் இரு வாகனங்களுடன் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். யாருமில்லாத குடோன் என்பதால் உயிர்சேதம் இல்லை. ஆனால் அங்கிருந்த ஸ்பீக்கர், லைட்டிங், அடார்னர்ஸ் உள்பட, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டதாக, பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.