/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை
ADDED : மே 24, 2025 07:50 PM
அரக்கோணம்,:மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை மறுநாள் உருவாகக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை, தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திடம் கோரிக்கை வைத்தது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து, கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு, 60 வீரர்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் நேற்று முன்தினம் இரவு விரைந்தனர்.