/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ யோக நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம் அதிகரிப்பு யோக நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம் அதிகரிப்பு
யோக நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம் அதிகரிப்பு
யோக நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம் அதிகரிப்பு
யோக நரசிம்மர் மலையில் மான் நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : மே 24, 2025 08:06 PM
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில் அமைந்துள்ளது.
யோக நரசிம்மர் அருள்பாலிக்கும் பெரிய மலைக்கு எதிரே உள்ள சிறிய மலையில் அனுமன் அருள்பாலிக்கிறார்.
இந்த மலைக்கோவிலில் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. பெரிய மலை, சிறிய மலையை சுற்றிலும் ஏராளமான மலைகள் உள்ளன.
இதில், அனுமன் மற்றும் சிவன் கோவில்களும் உள்ளன.
இந்த மலைப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குரங்குகளுடன், தற்போது மான்களும் நடமாடி வருகின்றன.
மலைக்கோவிலுக்கு படி வழியாக நடந்து செல்லும் பக்தர்கள், மான்களின் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்.
திருப்பதி மலையில் உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் இருப்பது போல், தற்போது சோளிங்கர் நரசிம்ம சுவாமி மலையிலும் மான்கள் சுற்றித்திரிவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.