/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ மாயமான பொறியாளர் நிர்வாண நிலையில் மீட்பு மாயமான பொறியாளர் நிர்வாண நிலையில் மீட்பு
மாயமான பொறியாளர் நிர்வாண நிலையில் மீட்பு
மாயமான பொறியாளர் நிர்வாண நிலையில் மீட்பு
மாயமான பொறியாளர் நிர்வாண நிலையில் மீட்பு
ADDED : மே 25, 2025 02:02 AM
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே மாயமான தனியார் நிறுவன மேற்பார்வை பொறியாளர், நிர்வாண நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே சாலை அமைக்கும் பணியில், 'எஸ்.டி.கே., கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரசிம்மன், 44, மேற்பார்வை பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த, 22ம் தேதி காலை, பணிக்கு சென்றவர் மாயமானார். வாலாஜாபேட்டை போலீசார் தேடினர். வாலாஜா அடுத்த பக்கிரி மலைப்பகுதியில், நிர்வாணமாக மயங்கி கிடந்தவரை, போலீசார் நேற்று மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, மயங்கி விழுந்ததாக தெரிவித்தார். பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் பக்கிரிமலைக்கு, அவர் ஏன் சென்றார் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.