/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 45 நிமிடம் தாமதம் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 45 நிமிடம் தாமதம்
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 45 நிமிடம் தாமதம்
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 45 நிமிடம் தாமதம்
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் 45 நிமிடம் தாமதம்
ADDED : மே 23, 2025 03:15 AM

அரக்கோணம்:அரக்கோணம் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் இருந்து மேல்பாக்கத்தில் உள்ள ரயில்வே யார்டுக்கு நேற்று மாலை 4:00 மணியளவில் 27 பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்றது.
ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சொன்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென சரக்கு ரயிலின் முதல் மற்றும் நான்காவது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
சுதாரித்த டிரைவர் ரயிலை நிறுத்தினார். ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடம் புரண்ட ரயிலின் இரண்டு பெட்டிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இதனால் சென்னை -- திருவனந்தபுரம், சென்னை -- பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. அதேபோல் அரக்கோணம் -- திருத்தணி புறநகர் ரயில்கள் என அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ஏழு ரயில்கள் 45 நிமிடங்கள் தாமதமாக சென்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வழியாக செல்லும் பயணியர் ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையத்தில் பகுதிகளில் நிறுத்தப்பட்டன.
மீட்பு பணிகள் நிறைவடைந்தவுடன் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.