Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ 2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

2 சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.1.80 லட்சம் பறிமுதல்

ADDED : ஜூன் 11, 2024 05:36 PM


Google News
ராணிப்பேட்டை:அரக்கோணம் மற்றும் வாணியம்பாடி சார் -- பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 1.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சார் - பதிவாளர் வின்சென்ட், பத்திரப்பதிவுக்கு வருபவர்களிடம் அதிக லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி முதல், நேற்று அதிகாலை, 3:00 மணி வரை சோதனை நடத்தினர்.

இதில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, கணக்கில் வராத, 1.20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், திருப்பத்துார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை விடிய விடிய சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத, 60,540 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us