ADDED : ஜூன் 17, 2025 06:28 AM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மூலவர்களுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.