ADDED : ஜூன் 17, 2025 06:27 AM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளுக்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை கிலோ ரூ.20க்கு விற்பனையானது. பழத்தின் எடைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.250 வரை பலாப் பழங்கள் விற்பனையாகின.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள், தங்களுக்கு தேவையான பலாப் பழங்களை எடையிட்டு முழு பழங்களாக வாங்கிச் சென்றனர்.