ADDED : செப் 16, 2025 04:07 AM

பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கோயிலில் நேற்று முன்தினம் மாலை 5:30 துவங்கி அபிஷேகம் நடந்தது. மேலும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.
இதன்படி அபிஷேகம் நிறைவடைந்து எலுமிச்சை, வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.