/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய ரேஷன்கார்டு வழங்குவதில் தாமதம்: 200 பேர் காத்திருப்பு புதிய ரேஷன்கார்டு வழங்குவதில் தாமதம்: 200 பேர் காத்திருப்பு
புதிய ரேஷன்கார்டு வழங்குவதில் தாமதம்: 200 பேர் காத்திருப்பு
புதிய ரேஷன்கார்டு வழங்குவதில் தாமதம்: 200 பேர் காத்திருப்பு
புதிய ரேஷன்கார்டு வழங்குவதில் தாமதம்: 200 பேர் காத்திருப்பு
ADDED : செப் 16, 2025 04:07 AM
திருவாடானை: புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 200க்கும் மேற்பட்டவர்களுக்கு விரைவாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் திருமணம் நடைபெற்ற ஏராளமானோர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். ரேஷன் கார்டு தனியாக இருக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும் தற்போது அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற வசதியாக இருக்கும் என்பதால் புதிய கார்டு கேட்பது தொடர்கிறது. ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் நாள் தோறும் அலுவலகங்களுக்கு சென்று கார்டு வந்துவிட்டதா என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இது குறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:
புதிய கார்டு இல்லாததால் எந்த பணிகளுக்கும் விண்ணப்பிக்கவும், முக்கிய தேவைகளுக்கு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொடுக்க முடியவில்லை. இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கவும் முடியவில்லை. ஏற்கனவே பெற்றோர்கார்டுகளில் இருந்துநீக்கம் செய்த பிறகே புதிய கார்டுக்கு விண்ணப்பித்தோம்.
தற்போது பெயர்களை நீக்கிவிட்டதால் எங்களது பெயர்கள் எதிலும் இல்லாத நிலை உள்ளது. மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கும் பணி நடப்பதால் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சீக்கிரமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர்கள் கூறுகையில், ஏப்.,வரை புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு விட்டது. மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றனர்.