/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனைஅகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை
ADDED : ஜூன் 24, 2024 01:52 AM
திருப்புல்லாணி : அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சென்னை மயிலாப்பூரில் அகில இந்திய அளவிலான 15வது சொபுகாய் சிட்டோரயூ ஓப்பன் கராத்தே போட்டி நடந்தது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையை சேர்ந்த ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சிஷாந்த் 13வயதிற்குட்பட்ட ஜூனியர் பிரிவு கராத்தே மற்றும் குமித்தே சண்டை போட்டியில் முதலிடம் பிடித்தார்.வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர் சுஜித்சிங் 10 வயதிற்குட்பட்ட குமித்தே ஓபன் கராத்தே போட்டியில் வென்று மூன்றாம் இடம் பிடித்தார்.வென்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு கராத்தே சங்கத்தின் மாநில செயலாளர் அல்தாப் ஆலம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். கராத்தே பயிற்சியாளர் தினைக்குளம் சசிக்குமார் உடனிருந்தார்.