/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கயிறுகட்டி பாதுகாப்பு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கயிறுகட்டி பாதுகாப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கயிறுகட்டி பாதுகாப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கயிறுகட்டி பாதுகாப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கயிறுகட்டி பாதுகாப்பு
ADDED : ஜூன் 24, 2024 01:57 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டட வளாகத்தில் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் டூவீலர்கள்நிறுத்தாமல் கயிறு கட்டியுள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடம் 154.84 கோடி ரூபாயில் கட்டப்பட்டது.
500 படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சைப்பிரிவு, என பல்வேறு பிரிவுகள் உள்ளன.இதில் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டடத்தின் வாசலில் வெளியில் இருந்து டூவீலரில் வரும் நபர்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை இறக்க முடியாமல் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது காவலர் ஒருவரை நியமித்து அவசர சிகிச்சைப்பிரிவு அருகே வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்தனர். காவலர்கள் சொல்வதை டூவீலர்களில் வருபவர்கள் பின் பற்றுவதில்லை. இதன் காரணமாக தற்போது அவசர சிகிச்சை பகுதிக்கு செல்லும் பகுதியில் மருத்துவமனை நிர்வாகத்தினர் கயிறு கட்டி அந்தப்பகுதியில் டூவீலர்களை நிறுத்த விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.