/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பெயரளவில் பூங்கா... அள்ளப்படாத குப்பை... கழிவுநீரால் நாறுது... 1 வது வார்டு மக்கள் அவதி பெயரளவில் பூங்கா... அள்ளப்படாத குப்பை... கழிவுநீரால் நாறுது... 1 வது வார்டு மக்கள் அவதி
பெயரளவில் பூங்கா... அள்ளப்படாத குப்பை... கழிவுநீரால் நாறுது... 1 வது வார்டு மக்கள் அவதி
பெயரளவில் பூங்கா... அள்ளப்படாத குப்பை... கழிவுநீரால் நாறுது... 1 வது வார்டு மக்கள் அவதி
பெயரளவில் பூங்கா... அள்ளப்படாத குப்பை... கழிவுநீரால் நாறுது... 1 வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஜூன் 24, 2024 01:50 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி 1 வது வார்டில் பாதாள சாக்கடைநீர் காலி இடங்கள், ரோட்டில் தேங்கு கிறது.
காலி இடங்கள்குப்பை கொட்டும் இடமாகியுள்ளது. துர்நாற்றத்தால்மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி 1வது வார்டில் சிவன்கோயில் தெற்கு, மேற்கு, வடக்கு, கோட்டைமேட்டு தெரு, கோழிகூட்டு தெரு, புதுஅக்ரஹார தெரு, முகவை ஊருணி தென்கரை, வடக்கு ரதவீதிஆகியவை அடங்கியுள்ளன. இந்த வார்டியில் 400க்கு மேற்பட்டவீடுகள் உள்ளன. 1200க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு அடிப்படைவசதிகள் பெயரளவில் மட்டுமேசெய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்து ரோட்டில் குளம் போல கழிவுநீர் தேங்குது வாடிக்கையாகியுள்ளது. மேலும் குப்பை சரிவரவீடுகளில் வாங்காத காரணத்தால் காலி இடங்களில்குப்பை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் துாக்கத்தை இழந்துதவிக்கின்றனர்.இதுகுறித்து 1வது வார்டு மக்கள் கூறியதாவது:ஏ.உதயசூரியன், கோட்டை மேட்டு தெரு: குப்பையை வாங்கபோதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லை என்கின்றனர்.இதனால் மக்கள் எனது வீட்டின் எதிரே காலி இடத்தை குப்பைகொட்டும் இடமாக்கியுள்ளனர். காற்றில் குப்பை பறந்து வீட்டுவாசலில் கிடக்கிறது. குறிப்பாக இறைச்சி கழிவுகளைகொட்டுவதால் நாய்கள் தொல்லையும் உள்ளது. எனகுப்பையை தினசரி வண்டியில் வந்து வாங்க நகராட்சிநடவடிக்கை எடுக்க வேண்டும்.சி.ராஜேந்திரன், ஓய்வுபெற்ற எஸ்.ஐ., கோழிகூட்டு தெரு: ராஜகாளியம்மன் கோயில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அக்கட்டடம் மிகவும்சேதமடைந்துள்ளதால் பூட்டி விட்டனர். தற்போது வாடகைகட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. எனவே புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும்.கோட்டைமேட்டு தெருவில் நகராட்சி பூங்கா அடையாளத்தை இழந்துமைதானமாக காட்சி அளிக்கிறது. விளையாட்டு சாதனங்களுடன், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்காஅமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.கே.விஜயா, கோழிக்கூட்டு தெரு, மெயின் ரோடு: பாதாள சாக்கடை பராமரிக்கப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.துர்நாற்றத்தால் தினமும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து கலெக்டர் வரை புகார் அளித்து அவரும் வந்து பார்த்துவிட்டு சென்றார். அதன் பிறகும் தீர்வு காணவில்லை. துர்நாற்றம்,கொசுத்தொல்லையால் துாக்கத்தை இழந்துள்ளோம்.பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்யவேண்டும்.எஸ்.சிலம்புசெல்வி, முகவை ஊருணி, தென்கரை: எங்கள்பகுதியில் பல நுாறுஆண்டுகள் பழமையான விசாலாட்சி சமேதகாசிநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தர்கள் நடந்து வரும் ரோடு குண்டும் குழியுமாகியுள்ளது. அவ்விடத்தில்குப்பையை கொட்டுகின்றனர். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்தால்கோயிலுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதுகுறித்துநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ஆகிய இடங்களில் மனுஅளித்தும் பலனில்லை. குப்பையை அகற்றி பக்தர்கள்வசதிக்காக ரோடு அமைத்து தர வேண்டும்.வி.முனீஸ்வரி (அ.தி.மு.க.,), 1வது வார்டு கவுன்சிலர்: வார்டுபிரச்னைகள் அனைத்து அதிகாரிகள் கவனத்திற்குசெல்கிறோம். குப்பையை ரோட்டோரத்தில் கொட்டக்கூடாதுஎன்பதற்காக காலையில் வண்டிகளுடன் நானே சென்றுவீடுதோறும் குப்பையை சேகரிக்க வலியுறுத்தியுள்ளேன். வார்டில் ரூ.50லட்சத்தில் புதிதாக ரோடு அமைக்கப்பட உள்ளது. புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தியுள்ளேன்.